வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 9 மார்ச் 2017 (23:20 IST)

யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் சாய்ஸ் நயன்தாரா. இரண்டாவது சாய்ஸ் த்ரிஷா?

பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சமீபத்தில் . YSR பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'கொலையுதிர்க் காலம்' என்று அறிவிக்கப்பட்டது. சக்ரி டோலட்டி இயக்கி வரும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா. நடித்து வருகிறார்


 


இந்நிலையில் யுவன் தனது டுவிட்டரில் விரைவில் YSR பிலிம்ஸ் தயாரிக்கும் 2வது படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். முதல் படத்தில் நயன்தாரா. முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இரண்டாவது படத்தில் த்ரிஷா முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

தனது இரண்டாவது படம் அனைத்து தரப்பினர்களும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.