உங்களுடைய நடிப்பு பிரமாதம் ….சூர்யாவைப் பாராட்டிய விஜய் பட வில்லன்

suriya sudeep
sinoj| Last Updated: வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:32 IST)


சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில்,
சூர்யா தயாரித்து நடித்திருந்த படம்
சூரரைப் போற்று. இப்படத்திற்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு முதல் அனைவரும் பெருமளவில் பாராட்டுகள் தெரிவித்து, படக்குழுவினரையும் ஹீரோ சூர்யாவையும்
வாழ்த்தி வருகின்றனர்.


இந்நிலையில், பிரபல கன்னடப் பட நடிகரும் புலி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்தவருமான கிச்சா சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவைப் பாராட்டியுள்ளார்.

அதில், சூர்யா உங்களுடைய நடிப்பு பிரமாதமாக இருந்தது. மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துகள் நண்பா என்று பதிவிட்டுள்ளார்.

இப்பதிவிற்கு சூர்யா ரசிகர்கள் லைக்குள் குவித்து வருகின்றனர்.,இதில் மேலும் படிக்கவும் :