கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாகும் யோகி பாபு..!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 26 மே 2020 (15:42 IST)

தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு.

சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,
உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. பொதுவாக ஒரு காமெடி நடிகர் ஹீரோவாக அவதாரமெடுத்தால் அதுவே அவரது கடைசி படமாக அமைந்துவிடும். ஆனால் யோகி பாபு விஷயத்தில் அப்படியே உல்ட்டாவாக நடக்கிறது.

நயன்தாராவுக்கு ஜோடியாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்த பிறகு தான் பெரிய இயக்குனர்களின் கவனம் யோகிபாபுவின் பக்கம் திரும்பியது. அந்தவகையில் தற்போது பா. ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் யோகிபாபுவை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுள்ளதாம். கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் வேலைகள் துவங்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :