தமிழை தவறாக எழுதிய ஜூலியை கிண்டல் செய்த சிநேகன்!

Sasikala| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (13:27 IST)
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி, கடைசியாக பிக்பாஸ் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆட்டோகிராஃப் பலகையில்  ஒரு செய்தியை எழுதிவிட்டு சென்றார்.

 
அதில் "மரணம் வரை உங்களை மறக்கமாட்டேன் - நன்றி. என்றும் உங்கள் கடைக்குட்டி - ஜூலி" என அதில் அவர்  எழுதியிருந்தார். ஆனால் அவர் 'நன்றி'க்கு பதிலாக 'ந்னறி' என எழுதியிருந்தார், அதுமட்டுமின்றி அவருடைய பெயரையே "ஜீலி" என தவறாக எழுதியிருந்தார்.
 
இதனை படித்த பிக்பாஸ் போட்டியாளர் சிநேகன் ஒரு மொபைல் போன் இருந்தால் ஜூலியின் ஆட்டோகிராஃபை போட்டோ  எடுத்து வைத்துக்கொள்வேன் என்று கூறினார். அதில் உள்ள தவறை சினேகன் சுட்டிக்காட்டி கிண்டல் செய்தார். இதனை  கேட்டுகொண்டிருந்த மற்றவர்களும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். 
 
இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் ஜூலியை கலாய்த்து வருகின்றனர். தமிழை கூட ஒழுங்கா எழுதத் தெரியாத  ஜூலி ஒரு தமிழச்சியா? என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் சிக்கிய ஜூலி தற்போது நன்றி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :