Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆவியுடன் மிரட்ட வருகிறார் இனியா

Sasikala| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (14:52 IST)
பேய் சீஸன் 2017லும் தொடர்கிறது. ஆவியால் இனியாவுக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளதுதான் சமீபத்திய தகவல்.

 
அழகு, திறமை இருந்தும் இனியாவை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவரது 70 எம்எம் அகன்ற  விழிகள் ஆயிரம் கதை பேசக்கூடியவை. அதே அகன்ற விழிகளை கொண்டுதான் 2017 -இல் அவர் மிரட்ட வருகிறார்.
 
ஸ்டீபன் என்ற அறிமுக இயக்குனரின் சதுர அடி 3500 படத்தில் இனியாதான் நாயகன், நாயகி எல்லாம். ஆவியால்  ஆட்கொள்ளப்படும் இனியா ஏன் அப்படி ஆனார், அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் கதை.
 
இனியாவின் தாய், தந்தையாக கோவை சரளாவும், எம்.எஸ்.பாஸ்கரும் நடிக்கின்றனர். ஊட்டியில் இதன் பெரும்பாலான  காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :