வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 10 டிசம்பர் 2016 (19:21 IST)

சென்னை 28 பார்ட் 3...?

2007 -இல் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. முதல் பாகத்தைப் போலவே கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் படம் தயாராகியுள்ளது. பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணியில் கோட்டைவிட்ட வெங்கட்பிரபுக்கு இது கம்பேக் மூவி.


 

 
இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த விஜயலட்சுமியும் நடித்துள்ளார். சென்னை 28 இரண்டாம் பாகம் பற்றி பேசியவர், இரண்டாம் பாகத்தைப் பார்த்தால் பார்ட் 3 எப்போது வரும் என்று கேட்பீர்கள் என கூறியுள்ளார்.
 
விஜயலட்சுமியின் பேச்சை வைத்து கவனித்தால் சென்னை 28 படத்தின் 3 -வது பாகம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.