நயன்தாராவே வந்தாலும் ஒண்ணும் அசைக்க முடியாது. ஓவியா ஆர்மியினர் அதிரடி


sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:37 IST)
பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற பங்கேற்பாளர்கள் ஓவியாவுக்கு போட்டியே இல்லை என்பதால் அவர் மிக எளிதில் வெற்றி பெற்றுவிடுவார் என்றே கூறப்பட்டது. ஓவியாவிடம் உள்ள அந்த சிரிப்பு பிரஷ்னெஷ் இப்போது இருக்கும் யாரிடமும் இல்லை. ஜூலி சிரிப்பதை பார்த்து பலருக்கு காய்ச்சல் வந்துவிட்டது வேற விஷயம்


 
 
இந்த நிலையில் ஓவியாவுக்கு நிகராக புதிய இறக்குமதிதான் பிந்துமாதவி. அவருக்கும் உடனே டுவிட்டர் பயனாளிகள் பிந்து ஆர்மி என்று தொடங்கிவிட்டாலும், ஓவியாவுக்கு சேர்ந்த ரசிகர் கூட்டம் தானா சேர்ந்த அன்பு கூட்டம். 
 
பிந்துமாதவிக்கு வெளியே என்ன நடக்கின்றது என்பது நன்றாக தெரியும். ஓவியாவுக்கு எந்த அளவுக்கு சமூக வலைத்தளங்களில் மாஸ் இருக்கின்றது என்பதை புரிந்தவர். எனவே அவர் தனது ஒரே போட்டியாளராக நினைக்கும் ஓவியாவை வெல்ல முடியுமா? என்பதே இப்போதைய ஒரே கேள்வி. இந்த நிலையில் நயன்தாரா, த்ரிஷாவே வந்தாலும் எங்க ஓவியாவை அசைக்க முடியாது என்று ஓவியா ஆர்மியினர் கெத்துடன் உள்ளனர். என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :