வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2016 (15:38 IST)

தமிழில் டப் செய்யப்படும் பிருத்விராஜின் ஊழம்...?

தமிழில் டப் செய்யப்படும் பிருத்விராஜின் ஊழம்...?

சரியாகத்தான் படித்திருக்கிறீர்கள்... ஊழம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்திருக்கும் படம்.


 
 
இவர்கள் இணைந்து உருவாக்கிய மெமரிஸ் திரைப்படம் கேரளாவில் ஹிட் என்பதால் ஊழம் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜீத்து ஜோசப்புக்கு பிடித்தமான க்ரைம் ஏரியா. ஆனால் சற்றே மாறுபட்டு ஆக்ஷன் ரிவெஞ்ச் ட்ராமாவாக இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
 
மலையாளப் படம் என்றாலும், படத்தின் கதை தமிழகப் பகுதிகளில்தான் நடக்கிறது. ஜெயபிரகாஷ், பசுபதி, சீதா போன்ற தமிழ் நடிகர்களும் படத்தில் இருக்கிறார்கள். அதனால் ஊழம் வெளியாகும் அன்று அதன் தமிழ் டப்பிங்கையும் வெளியிடும் யோசனையில் உள்ளது படக்குழு.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்