ஓவியாவை டம்மியாக்க பிந்துமாதவி? விஜய் டிவியின் தந்திரம் பலிக்குமா?

oviya bindhu" width="600" />
sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய்டிவி கோடிக்கணக்கான தொகை செலவு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் டிஆர்பி மூலம் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டும் என்பதே அதன் நோக்கமாக இருக்கின்றது.


 
 
ஆனால் ஒரு நயா பைசா கூட செலவு செய்யாத ஓவியாவுக்குத்தான் இந்த நிகழ்ச்சியால் புகழ் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிகழ்ச்சியால் விஜய் டிவிக்கு அதிகப்படியான வருமானம் வந்த போதிலும் ஓவியாவுக்கு கிடைத்துள்ள புகழை விட குறைவுதான். இன்னும் சொல்லப்போனால் சில சமயம் விஜய் டிவி ஓவியாவின் புரட்சிப்படையால் விமர்சனமும் செய்யப்படுகிறது.
 
எனவே ஓவியாவை டம்மியாக்க அவருக்கு நிகரான ஒரு போட்டியாளரை உள்ளே அனுப்ப முடிவு செய்து இன்று பிந்துமாதவியை அனுப்பியுள்ளது. விஜய்டிவி எதிர்பார்த்த மாதிரியே ஓவியா புரட்சிப்படை மாதிரியே பிந்துமாதவி படையும் தோன்றிவிட்டது. இரு படைகளும் இன்னும் ஓரிரு நாட்களில் டுவிட்டரில் அடித்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் விஜய் டிவியின் இந்த தந்திரம் பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

webdunia

இதில் மேலும் படிக்கவும் :