Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியா வெளியேற விஜய்டிவியும் கமலும் தான் காரணமா?

oviya kamal" width="600" />
sivalingam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (23:00 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து சற்றுமுன்னர் ஓவியா வெளியேறிவிட்டதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும்  பல செய்தி நிறுவனங்கள் ஓவியா வெளியேறிவிட்டதாகவே கூறுகின்றன.


 
 
ஓவியா வெளியேறியதற்கு பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஒரு காரணம் என்றால் விஜய் டிவி நிர்வாகமும் கமல்ஹாசனும் இன்னொரு முக்கிய காரணம்
 
பிக்பாஸ் வீட்டின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஓவியாவை டார்ச்சர் செய்கின்றனர் என்று நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்கும் தெரிகிறது. ஓவியாவை மன அழுத்தத்திற்கு ஆளாக்குவதில் இரண்டு முக்கிய நபர்கள் காரணமாக இருந்தனர் என்பதும் புரிந்ததே.
 
ஆனால் கமல்ஹாசன் அந்த இரண்டு நபர்களையும் கொஞ்சம் கூட கண்டிக்கவில்லை. அதுமட்டுமின்றி வேண்டுமென்றே ஓவியாவை அவமதிக்கும் வகையில் டாஸ்க் கொடுத்து அவருக்கு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது விஜய் டிவி. எனவே இன்று ஓவியா வெளியேறிவிட்டது உண்மை என்றால் அதற்கு கமல்ஹாசனும் விஜய் டிவியும் பதில் சொல்லியே ஆகவேண்டும்


இதில் மேலும் படிக்கவும் :