வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 24 மே 2016 (11:17 IST)

யாருப்பா அது கொளுத்திப் போட்டது...?

யாருப்பா அது கொளுத்திப் போட்டது...?

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் தழுவலில் மாதவன் நடிப்பதாக ஒரு வதந்தி உலவியது. சார்லி படத்தில் துல்கர் சல்மானின் நடிப்பை மாதவன் பாராட்டியிருந்தார். 


 
 
அவரது இந்த ட்விட்டர் பாராட்டை வைத்து கிசுகிசுப்பாளர்கள் உருவாக்கிய வதந்தி இது என்பதால் நாம் அந்த செய்தியை வெளியிடவில்லை.
 
இந்நிலையில், சார்லி தமிழ் தழுவல் வெறும் வதந்தி என்பதை மாதவன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
 
நல்ல படங்கள், மனதை பாதித்த படங்களின் ரீமேக்கில் நடிக்க எனக்கு ஆட்சேபணையில்லை. சார்லி படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அதன் தமிழ் தழுவலில் நடிக்கும்படி யாரும் என்னை அணுகவில்லை என மாதவன் கூறியுள்ளார்.