ரங்குஸ்கின்னா என்ன...? பூஜா தேவரியா சொல்லும் புதுமையான விளக்கம்

Sasikala| Last Modified வெள்ளி, 30 டிசம்பர் 2016 (15:40 IST)
தரணீதரன் இயக்கத்தில் சிரிஷ், பூஜா தேவரியா நடிக்கும் படத்துக்கு ராஜா ரங்குஸ்கி என்று பெயர் வைத்துள்ளனர். ராஜா  தெரியும், அதென்ன ரங்குஸ்கி...?

 
இதற்கு பூஜா தேவரியா ஒரு அடடே விளக்கம் அளித்துள்ளார்.
 
மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன். அவரை நெருக்கமானவர்கள் ரங்குஸ்கி என்று அழைப்பார்களாம்.  அதைத்தான் படத்தின் பெயராக வைத்திருக்கிறார்களாம்.
 
சரி, இந்தப் படத்துக்கும் சுஜாதாவின் இயற்பெயருக்கும் என்ன நம்பந்தம்? இந்தப் படத்தில் சுஜாதாவைப் போலவே பூஜா  தேவரியாவும் எழுத்தாளராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதன்  காரணமாகத்தான் இப்படியொரு பெயர்... ராஜா ரங்குஸ்கி.
 
படத்தின் கதையைவிட பெயர் காரணம் பிரமாதமாக இருக்கும் போலிருக்கு.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :