Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

என்னாச்சு சபாஷ் நாயுடுக்கு...?

Sasikala| Last Modified திங்கள், 2 ஜனவரி 2017 (15:32 IST)
கமல் நடிப்பில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சபாஷ் நாயுடு திரைப்படம் கமல் மாடிப்படிக்கட்டிலிருந்து விழுந்து காலை  முறித்துக் கொள்ளவில்லை என்றால் இந்நேரம் வெளியாகியிருக்கும். எதிர்பாராத விபத்தால் படம் தாமதமாகியுள்ளது.

 
ஜெயலலிதா இறந்தபோது, படவேலைகளுக்காக அமெரிக்காவில் இருந்ததால் கமல் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவில்லை  என்று கூறப்பட்டது. அமெரிக்காவில் அவர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்குகிறார் என்றனர். ஆனால், இதுவரை அப்படி எந்த செய்தியும் வரவில்லை.
 
இந்நிலையில், நாளை முதல் ஹைதராபாத்தில் சபாஷ் நாயுடு படப்பிடிப்பை தொடங்குகிறார் என சிலர் தகவல் கூறியுள்ளனர்.  ஆனால், அவை வெறும் வதந்திதான் என இன்னொருசாரார் கூறுகின்றனர்.
 
உண்மையில் சபாஷ் நாயுடுவின் நிலை என்ன? கமலுக்கு மட்டுமே வெளிச்சம்.


இதில் மேலும் படிக்கவும் :