வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 9 ஜூன் 2017 (11:53 IST)

குரலை அசிங்கபடுத்திய இயக்குநர்; அதுவே என் பலம் - லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என இரண்டிலும் வெற்றி கொடி நாட்டியவர். மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் பிரபல தொலைக்காட்சியில் மக்கள் குறை தீர்க்கும் ஒரு நிகழ்ச்சியை  நடத்தி வருகின்றார்.

 
லட்சுமி ராமகிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தபோது முதல் தற்போது வரை சினிமா துறையில் ஆண் ஆதிக்கமே நிரம்பி  வழிகின்றது என கூறியுள்ளார். மேலும் நான் மகான் அல்ல படத்தில் நடித்தபோது, இயக்குனர் சுசீந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். உங்கள் குரலை கேட்டாலே எரிச்சலாக உள்ளது, அதனால், நான்  டப்பிங் வைத்துக்கொள்கிறேன் என்று அவர் கூற, லட்சுமி ராமகிருஷ்ணன் மிகவும் கோபமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறிகையில், தற்போது என் குரல்தான் என்னுடைய பலமே என்று கருத்து தெரிவித்துள்ளார்.