வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (11:30 IST)

விவேக்கை டாக்டராக்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்

25 வருடங்களாக தமிழக மக்களை சிரிக்க வைத்துவரும் நடிகர் விவேக்குக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழ் திரைப்படங்களில் விவேக் ஆற்றிய பங்களிப்புக்காக அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது நடிப்புடன் தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் விவேக் செயல்படுத்தி வருகிறார்.
 
இந்நிலையில், சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த பட்டமளிப்பு விழா சென்னைக்கு அருகில் உள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே, சத்யபாமா பல்கலைக்கழகம் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் விஜய்க்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.