வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

தெறி டிரைலர் சாதனையை முறியடித்த விவேகம்

அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டிரைலர் வெளியான 8 மணி நேரத்தில் தெறி படத்தின் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் வெளியான பாடல்கள் மற்றும் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விவேகம் படத்தின் டிரைலர் தற்போது வைரலாகி உள்ளது.
 
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் மூன்றாவது படம் விவேகம். வேதாளம் திரைப்படத்துக்கு டிரைலர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவேகம் படத்தின் டிரைலர் எப்போது என்று காத்திருந்த ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் விவேகம் டிரைலர் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இதையடுத்து விவேகம் டிரைலர் தெறி படத்தின் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.