வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2016 (16:39 IST)

விஷ்ணு விஷாலின் புதிய படம் கதாநாயகன்

சுசீந்திரனின் மாவீரன் கிட்டு படத்தில் நடித்து முடித்த விஷ்ணு விஷால் தற்போது சொந்தத் தயாரிப்பில் முருகானந்தம் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.


 
 
இந்தப் படத்தில் கேத்ரின் தெரசா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 
 
பெயரிடப்படாமல் நடைபெற்று வந்த இப்படத்துக்கு கதாநாயகன் என பெயரிட்டு இருக்கிறார்கள். பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கதாநாயகன் படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து தலைப்புக்கான உரிமையை முறைப்படி வாங்கி பயன்படுத்தியிருக்கின்றனர்.