1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 27 ஆகஸ்ட் 2016 (14:18 IST)

விஜய் பாதையில் பயணிக்கும் விஷால்

விஜய் வழியில் தனது பிறந்தநாளை ஆர்ப்பாட்டமாக கொண்டாட முடிவு செய்துள்ளார் நடிகர் விஷால்.


 
 
நடிகர்கள் தங்கள் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுவது, அவர்கள் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்ப அறிகுறியாக பார்க்கப்படுகிறது. விஜய்தான் இதில் முதல்வர். அன்னதானம், நலத்திட்ட உதவிகள், பிறந்தநாள் அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று கொண்டாட்டம் தூக்கியடிக்கும். அதிகார மையத்துக்கு இது பிடிக்காமல் போக, கடந்த சில வருடங்களாக விஜய் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அவரது இடத்தை விஷால் பிடித்திருக்கிறார்.
 
வரும் 29 -ஆம் தேதி விஷாலுக்கு பிறந்தநாள். அதனை முன்னிட்டு 28, 29 தேதிகளில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள், குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என்று பல உதவிகளை செய்யவிருக்கிறார். என்னென்ன செய்யப் போகிறோம் என்று மீடியாவுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்.
 
விஜய்க்கு நேர்ந்ததை பார்த்த பின்பும் ஆர்ப்பாட்டத்தில் இறங்குகிறார் என்றால்... தில்லுதான்.