வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (13:18 IST)

பூஜையுடன் தொடங்கிய விஷால் - சுசீந்திரன் படம்

பாண்டியநாடு படத்துக்குப் பிறகு விஷால், சுசீந்திரன் இணையும் புதிய படம் நேற்று பூஜையுடன் தொடங்கியது.
விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியும், வேந்தர் மூவிஸும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. விஷால் ஜோடியாக முதல்முறையாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. டி.இமான் படத்துக்கு ஏற்கனவே இரு பாடல்களை ஒலிப்பதிவு செய்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்கிறார். வாசுகி பாஸ்கர் காஸ்ட்யூம்.
 
விஷால் படம் குறித்து கூறும்போது, இப்படம் எல்லோருக்கும் சிறப்பு வாய்ந்ததாக இருக்க வேண்டும். பாண்டியநாடு படக்குழு மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது என்றார்.