Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆட்டத்தை ஆரம்பித்த விஷால் - தயாரிப்பாளர்களுக்கு கடிதம்


Murugan| Last Modified வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (19:57 IST)
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 

 
நடிகர் விஷால் அணி நடிகர் சங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மேலும், சமீபத்தில் நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் மாறியுள்ளார். 
 
இந்நிலையில், அவர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தயாரித்து வெளியிட முடியாத, தொலைக்காட்சி உரிமம் கிடைக்காத, மானியம் கிடைக்காத படங்களின் விபரங்களை வருகிற 21ம் தேதி மாலை 6 மணிக்குள் தெரியப்படுத்துங்கள் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
 
இதன் மூலம், அந்த பிரச்சனைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் விஷால் அணியினர் இறங்குவார்கள் என எதிர்பர்க்கப்படுகிறது. விஷாலின் நடவடிக்கை தயாரிப்பாளர்களிடையே வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :