வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 25 பிப்ரவரி 2015 (15:17 IST)

விஷாலின் வி மியூஸிக் வெளியிடும் கள்ளப்படம் ஆடியோ

மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்த வடிவேல் இயக்கி நடித்துள்ள படம், கள்ளப்படம். இதற்கு கே இசையமைத்துள்ளதுடன், இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தும் உள்ளார். இவர் மட்டுமல்ல, படத்தில் பணிபுரிந்திருக்கும் மேலும் இரு தொழில்நுட்பக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.
 
இந்த நால்வரும் ஒரு படத்தை எடுக்க முயல்வதுதான் கள்ளப்படத்தின் கதை.
 
இன்று பிரபல எப்எம்மில் இதன் பாடல்களை வெளியிடுகின்றனர். கள்ளப்படத்தின் பாடல்களை விஷாலின் வி மியூஸிக் நிறுவனம் வெளியிடுகிறது. 
 
இறைவன் ஃபிலிம்ஸ் ஆனந்த் பொன்னிறைவன் படத்தை தயாரித்துள்ளார்.