1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (22:36 IST)

விஷால் படத்தை வாங்கிய விக்ரம் தயாரிப்பாளர்

விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்தின் கேரள விநியோக உரிமையை, ஷிபு தமீம்ஸ் வாங்கியுள்ளார். 
பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷால் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்செண்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் கேரள விநியோக உரிமையை ஷிபு தமீம்ஸ் வாங்கியுள்ளார். இவர், விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்துள்ளார்.