திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் தாக்கல் செய்த மனு நிறுத்தி வைப்பு


Abimukatheesh| Last Updated: சனி, 4 பிப்ரவரி 2017 (22:04 IST)
தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால் நேற்று மாலை மனு தாக்கல் செய்தார். விஷால் அணியினர் பல்வேறு பதவிக்கு போட்டியிட மனு இறுதி நாளான நேற்று மனு தாக்கல் செய்தனர்.

 

 
இதுகுறித்து விஷால் கூறியதாவது:-
 
நான் பதவிக்கு ஆசைப்பட்டு தேர்தலில் போட்டியிடவில்லை தாயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் போட்டியிடுகிறேன். நான் உள்பட எங்கள் அணியினர் அனைவரும் இப்போதே ராஜினாமா கடிதம் எழுதியுள்ளோம். ஒரு ஆண்டில் நாங்கள் சொல்வதை செய்யவில்லை என்றால் நாங்களே ராஜினாமா செய்துவிடுவோம், என்றார்.
 
இந்நிலையில் தற்போது விஷால் தாக்கல் செய்த மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :