இந்த ஹீரோயின் கூடவா.....கார்த்தி நீ செத்த - விஷால்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (14:47 IST)
கருப்பு ராஜா வெள்ளை ராஜா பட செய்தியாளர்கள் சந்திப்பில், அந்த ஹீரோயின் கூடவா என கார்த்தியை விஷால் கேலி செய்தார்.

 

 
பிரபுதேவா இயக்கத்தில் விஷால், கார்த்தி சேர்ந்து நடிக்கும் படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இந்த படத்தில் பாலிவுட் நடிகை சயீஷா ஷாகல் நடிக்கிறார். இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது. அதில் பேசிய விஷால் கூறியதாவது:-
 
வெடி படத்திற்கு பிறகு நானும், பிரபுதேவா மாஸ்டரும் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறோம். இந்த படம் இரண்டு ஹீரோக்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் கொடுத்துள்ள படம். சயீஷா வனமகன் படப்பிடிப்பில் டான்ஸ் ஆடியபோது நானும் கார்த்தியும் பார்த்தோம். பிரபுதேவாவின் ஆவி அவருக்குள் புகுந்தது போன்று ஆடினார்.
 
இந்த படத்தில் சயீஷாவும், கார்த்தியும் சேர்ந்து ஆடும் பாடல் ஒன்று உள்ளது. சயீஷா மாதிரி ஒரு பொண்ணு ஆடி நான் பார்த்தது இல்லை. கார்த்தி நீ செத்த, என கூறினார்.
 
மேலும், நானும் கார்த்தியும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.10 கோடி தருகிறோம். இந்த படம் மற்றும் எதிர்காலத்தில் நடிக்கும் படங்களில் இருந்து கிடைக்கும் பணத்தை கொடுப்போம், என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :