விஷாலின் 'இரும்புத்திரை' சென்சார் தகவல்கள்

Last Modified சனி, 3 மார்ச் 2018 (16:51 IST)
விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள திரைப்படம் ” இரும்புத்திரை “. இந்த படத்தை P.S. மித்ரன் இயக்கியுள்ளார். ஆக்சன் கிங் அர்ஜுன்
வில்லனாகவும் , சமந்தா கதாநாயகியாகவும் நடித்திருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் சைபர் க்ரைம் த்ரில் படமான ” இரும்புத்திரை ” படத்துக்கு ” U ” சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் குழு. சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த படத்தின் அதிகாரபூர்வமான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இந்த படத்தில் விஷால், மேஜர் கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா, சைக்காலஜி டாக்டர் கேரக்டரிலும் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ்வாக கருதப்படுகிறது

webdunia

இதில் மேலும் படிக்கவும் :