செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 28 நவம்பர் 2014 (15:20 IST)

சண்டைக் காட்சியில் விஷாலுக்கு காயம்

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்தின் சண்டைக் காட்சியை பொள்ளாச்சியில் அரங்கு அமைத்து எடுத்து வந்தனர். 
எதிரிகளுடன் பாய்ந்து சண்டையிடுவதற்கு வசதியாக விஷாலின் உடம்பில் கயிறுகட்டப்பட்டிருந்தது. அதன் உதவியுடன் அவரை அந்தரத்தில் பறக்க வைத்து சண்டைக் காட்சியை எடுத்தனர்.
 
அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அவிழ்ந்து விஷால் உயரத்திலிருந்து தரையில் விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடலில் சிராய்ப்புகளும் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். 
 
தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் ஆபத்து ஏதுமில்லை எனவும் படயூனிட் தெரிவித்துள்ளது.