விஷாலுக்கு கருணை காட்டும் நயன்தாரா!!


Sugapriya Prakash| Last Modified புதன், 11 ஜனவரி 2017 (17:45 IST)
தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுப்பத்தால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். 

 
 
ஹீரோயின் சார்ந்த கதைகளில் அதிகமாக நடித்து வரும் நயன்தாரா தற்போது, அறம், டோரா, கொலையுதிர் காலம், நேர் வழி, இமைக்கா நொடிகள் மற்றும் 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், நயன்தாரா விஷாலுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே  விஷாலும், நயன்தாராவும் ‘சத்யம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். 
 
இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷால் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :