ஆஸ்கார் விருதுக்கு சென்ற விசாரணை


Abimukatheesh| Last Updated: வியாழன், 22 செப்டம்பர் 2016 (18:42 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை திரைப்படம் ஆஸ்கார் விருத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

 

 
‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் விசாரணை. அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி போன்றவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
 
இத்திரைப்படத்திற்காக சமுத்திரகனி தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் நீதி மக்களுக்கு எதிராக புகைக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது.
 
இந்நிலையில் விசாரணை படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையில் மொத்தம் 29 இந்திய படங்கள் இடம்பெற்றது. ஆனால் தேர்வு குழுவினர் விசாரணை படத்தை மட்டும் ஆஸ்கார் விருது போட்டிக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :