Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பல்டியத்த தனுஷ்… பின்வாங்காத அஜித்

cauveri manickam| Last Modified வியாழன், 27 ஜூலை 2017 (17:59 IST)
‘விவேகம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷன், தமிழ் வெர்ஷன் வெளியான பிறகுதான் வெளியாகும் என்கிறார்கள். 
தனுஷ் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி 2’, நாளை (ஜூலை 28) ரிலீஸாவதாக இருந்தது. ஆனால், சென்சார் செய்வதில் ஏற்பட்ட சிக்கலால், கடைசி நேரத்தில் சென்சார் ஆகியும் ரிலீஸ் செய்ய முடியாமல் ஆகிவிட்டது. காரணம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால், ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்படாததால், ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது.

இதே நிலைதான் அஜித் நடித்துள்ள ‘விவேகம்’ படத்துக்கும். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘விவேகம்’, இப்போதுதான் சென்சாருக்குப் போயிருக்கிறது. ஒருவேளை உடனே சென்சார் ஆனாலும், தெலுங்கு வெர்ஷன் சென்சார் ஆவதில் சிக்கல் என்கிறார்கள். ‘அதை ஒரு வாரம் கழித்துகூட ரிலீஸ் செய்து கொள்ளலாம். தமிழில் முதலில் ரிலீஸ் செய்யுங்கள்’ என்று கூறிவிட்டாராம் அஜித்.


இதில் மேலும் படிக்கவும் :