Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இன்னொரு படத்தின் காப்பியா விஐபி 2?

cauveri manickam| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (15:23 IST)
தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2’, இன்னொரு படத்தின் காப்பியாக இருக்கலாம் என்கிறார்கள்.
 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. தனுஷுக்கு எதிரான கேரக்டரில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை கஜோல். எனவே, ஹிந்தியிலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்கின்றனர். இந்தப் படத்தைப் பார்த்தால், இது இன்னொரு படத்தின் காப்பி என ஹிந்தி ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்கின்றனர்.

காரணம், ஸ்ரீதேவி, அனில் கபூர் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான ‘லாட்லா’ ஹிந்திப் படத்தின் கதையும் இதே மாதிரித்தான் இருக்குமாம். திமிர் பிடித்த, இரக்கமற்ற தொழிலதிபராக ஸ்ரீதேவி நடித்திருப்பாராம். இதே கான்செப்ட் 2017க்கும் ஒத்துவருமா? அதனால், சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள். ஆனால், ‘பவர் பாண்டி’ என்ற அற்புதமான படத்தைக் கொடுத்த இயக்குனர் தனுஷ், ‘விஐபி 2’ கதையை ஒரிஜினலாக எழுதியிருப்பார் என்றே நம்புவோமாக…


இதில் மேலும் படிக்கவும் :