மும்பையில் இசை வெளியீட்டு விழா நடத்தும் தனுஷ்!!

Cauveri Manickam (Suga)| Last Modified புதன், 14 ஜூன் 2017 (16:35 IST)
தனுஷ் நடித்துள்ள ‘விஐபி 2’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மும்பையில் நடக்க இருக்கிறதாம்.

 
செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2. இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கஜோல், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். 
 
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, அப்பாவாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
 
கஜோல் மற்றும் தனுஷுக்கு இருக்கும் பாலிவுட் ஃபேமஸை வைத்து, ஹிந்தியிலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை மும்பையில் பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகின்றனர். 
 
ரஜினியின் நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம். அதன்மூலம், இந்திய அளவில் தன்னுடைய படத்தைத் திரும்பிப் பார்க்கவைக்கத் திட்டமிட்டுள்ளார் தனுஷ்.
 
 


இதில் மேலும் படிக்கவும் :