Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இயக்குனர் சங்க தேர்தல். 3வது முறையாக விக்ரமன் வெற்றி


sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:52 IST)
இன்று நடைபெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவருக்கு நடைபெற்ற தேர்தலில், புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் வெற்றி பெற்றார். இவர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
இயக்குனர் சங்க தேர்தலில் புது வசந்தம், புதிய அலைகள் என இரு அணிகள் போட்டியிட்ட போதிலும் தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் புது வசந்தம் அணியை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. எனவே விக்ரமன் மற்றும் ஆர்.கே.செவமணி மிக எளிதில் வெற்றி பெற்றனர்.
 
புது வசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் மொத்தம் பதிவான 1,605  வாக்குகளில் 1,533 வாக்குகள் பெற்று விக்ரமன் வெற்றி பெற்றார். வெற்றி அறிவிப்புக்கு பின்னர் விக்ரமன் கூறியதாவது: இயக்குநர்கள் சங்க தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளேன். உறுப்பினர்களின் எதிர்பார்ப்புகளை நிச்சயம் நிறைவேற்றுவேன். அவர்களின் அனைத்து கோரிக்கைகளும் 6 மாதத்துக்குள் நிறைவேற்றப்படும்’’ என தெரிவித்துள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :