வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Updated : திங்கள், 29 டிசம்பர் 2014 (11:32 IST)

சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விக்ரம்

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் பேரால் பார்க்கப்படுவது, சல்மான் கான் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் விக்ரம் கலந்து கொள்கிறார்.
பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். எட்டாவது செஷன் தற்போது நடந்து வருகிறது. இதில் நடிகர் விக்ரம் கலந்து கொள்கிறார். அதன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தற்போது மும்பை சென்றுள்ளார்.
 
விக்ரம் நடித்துள்ள ஐ ஜனவரி 9 திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஐ வெளியாகிறது. இந்தி பார்வையாளர்களிடம் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.