செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (18:12 IST)

விக்ரம் நடித்த இருமுகன் இப்போது இண்டர்நேஷனல் ரவுடி 2017

விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள இருமுகன் படத்தில் விக்ரமுடன் நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோரும் இருமுகனில்  நடித்துள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கம், ஹாரிஸ் இசை. நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘இருமுகன்’.  



இந்தப் படம் தமிழிலும் வெற்றி பெற்றது. சமீபத்தில் இந்தப் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு தனியார்  தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பானது. 
 
இதனை தொடர்ந்து யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட இரண்டே நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை பெற்று  புதிய சாதனையை இப்படம் படைத்திருககிறது. ஹிந்தியில் இப்படத்திற்கு ‘இண்டர்நேஷனல் ரவுடி 2017’ என்று பெயர்  வத்துள்ளனர். படம் வெளிவந்து இந்தியாவையும் தாண்டி நேபாளம், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளிலும் இந்த  படத்தினை பார்த்து விக்ரமை பாராட்டி வருகின்றனர்.