Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கும் விக்ரம்

Kamal and Vikram
CM| Last Updated: திங்கள், 15 ஜனவரி 2018 (13:02 IST)
கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம்.

 
விஜய் சந்தர் இயக்கத்தில், விக்ரம் - தமன்னா நடித்துள்ள ‘ஸ்கெட்ச்’ நேற்று ரிலீஸாகியுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் ஹரி இயக்கத்தில் ‘சாமி ஸ்கொயர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விக்ரம்.
 
இந்தப் படங்களுக்குப் பிறகு, கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். கமலின் அசோசியேட்டாக இருந்து ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :