1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (14:14 IST)

இன்று 10 எண்றதுக்குள்ள பர்ஸ்ட் லுக்

இன்று விக்ரமின் பிறந்தநாள். ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக 10 எண்றதுக்குள்ள படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிடுகின்றனர்.
 
விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள தயாராகி வருகிறது. சமந்தா ஹீரோயின். ரோடு மூவி வகையைச் சேர்ந்த இந்தப் படத்தில் பசுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். உலகின் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
 
ஏ.ஆர்.முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் விக்ரம் லாரி ட்ரைவராக நடிப்பதாக கூறப்படுகிறது.