வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (18:00 IST)

உதவி இயக்குனரை காதலிக்கிறாரா விஜயலட்சுமி?

சென்னை 28 படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. அதன் பிறகு அஞ்சாதே, வனயுத்தம், வெண்ணிலா வீடு உள்பட பல படங்களில் நடித்தார்.
 

 
காதல் கோட்டை படத்தை இயக்கிய அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வல்லினம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஒரு சினிமா படப்பிடிப்பின் போது இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், அவர்களின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.