1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (16:06 IST)

தயாரிப்பாளர்களை அழவைக்கும் நகைச்சுவை நடிகர்கள் - டி.ராஜேந்தர் பேச்சு

'ராட்டினம்' என்ற படத்தைத் தயாரித்த ராஜரத்தினம் பிலிம்ஸ், அடுத்து 'கல்கண்டு' என்ற படத்தைத் தயாரித்து வருகின்றனர். ஏ.எம்.நந்தகுமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 
 
'கல்கண்டு' படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

 
இசை வெளியீட்டு விழாவில் பேசிய டி.ராஜேந்தர், நகைச்சுவை நடிகர்கள் மக்களை மட்டும் சிரிக்க வைக்கக் கூடாது. அவரை வைத்துப் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களையும் சிரிக்க வைக்க வேண்டும்.
 
சில நகைச்சுவை நடிகர்கள் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார்கள். அது நியாயம் தானா! நான் 1500 ரூபாய் கொடுத்த நகைச்சுவை நடிகர் ஒருவர், இன்று கோடிக் கணக்கில் கேட்கிறாராம். நான் அவர் பின்னால் போனதில்லை. அந்தக் காலத்தில் ஒரு மணிநேரம் ஒன்றரை மணிநேரம் ஒரு படத்தில் நடித்தே அந்தத் தயாரிப்பாளரையும் மக்களையும் சிரிக்க வைத்தார். இன்று தயாரிப்பாளரை அழ வைத்து, மக்களைச் சிரிக்க வைக்கிறார்கள் என்று பேசினார்.
 
ஏன் சார்? உங்களுக்கு அந்த பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா? பட்ஜெட் ஒத்து வரவில்லை என்றால், தயாரிப்பாளர் வேறு நகைச்சுவை நடிகருக்கு அந்த வாய்ப்பை வழங்கலாமே.