செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 12 ஜனவரி 2016 (08:10 IST)

விஜய் டிவியை தூக்குவோம்டா...

விஜய் டிவியின் நீயா நானா விவாத மேடை பொங்கலன்று போர்க்களமாகப் போகிறது.


 

 
இதுவரை இணையத்தில் எதிரெதிராக வாள் பிடித்த விஜய் ரசிகர்களையும், அஜித் ரசிகர்களையும் எதிரெதிரே உட்கார வைத்து பேசவிட்டிருக்கிறார்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர் அந்தோணியும், ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்தும்.
 
நிகழ்ச்சி படப்பிடிப்பு நடந்த போது இரு தரப்பினருக்கும் நடுவில் வார்த்தைப் போர் தடித்ததாக கேள்வி.
 
இந்நிலையில், எங்க தலைவருக்கு ஒரு களங்கம் ஏற்பட்டால் விஜய் டிவி அலுவலகம் இருக்காது என்று விஜய், அஜித் ரசிகர்கள் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் போர் முரசு கொட்டியிருக்கிறார்கள்.
 
பரபரப்பு விஷயங்களை வைத்து இன்ஸ்டன்ட் பிரியாணி கிண்டுவது ஊடகங்களின் வழக்கம்தான்.
 
ஆனால், அஜித் வெர்சஸ் விஜய் என்ற இந்த பரபரப்பு பலநேரம் தீயை பற்ற வைக்கவே உதவியிருக்கிறது.
 
அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று ஒரு வாரப்பத்திரிகை கணிக்க, அது ஒருவருடத்துக்கும் மேலாக இணையத்தில் புகைந்தது நினைவிருக்கலாம்.
 
அனைத்தையும் தெரிந்து கொண்டு இந்த புதைகுழிக்குள் கால் வைத்திருக்கிறது விஜய் டிவி. பொங்கலுக்கு இருக்கிறது கச்சேரி.