வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2015 (08:41 IST)

விஜய் படம் - கசிந்தது சமந்தாவின் கதாபாத்திரம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.
தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் தொடக்கவிழா சில தினங்கள் முன்பு சென்னையில் நடந்தது. விஜய்யுடன் சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா சரத்குமார், பிரபு, இயக்குனர் மகேந்திரன் நடிக்கின்றனர். இது, சத்ரியன் படத்தின் தழுவல் என கூறப்படுகிறது.
 
இந்தப் படத்தில் சமந்தா கல்லூரி செல்லும் மாணவியாக நடிக்கிறார். விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் ஐந்து வயது குழந்தை நடிக்கயிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.