வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 30 அக்டோபர் 2014 (12:23 IST)

நவ. 10 ஆட்டம் அடிதடியுடன் ஆரம்பமாகும் விஜய், சிம்புதேவன் படம்

விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் நவம்பர் 10 இசிஆர் அருகேயுள்ள உத்தண்டியில் தொடங்குகிறது.
 
ஏற்கனவே இங்கு பிரமாண்டமான அரண்மனை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் விஜய், ஸ்ருதி, ஹன்சிகா மூவரும் 300 -க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சண்டைக் காட்சியொன்றை படமாக்குகின்றனர். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் லீ விடேகர் இந்த சண்டைக் காட்சியை அமைக்கிறார். 
 
கமர்ஷியல் படமாக தயாராகும் இதில் கன்னட நடிகர் சுதீஷ், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார்.
 
இதில் விஜய்க்கு இரண்டு வேடங்கள். இரண்டு வேடங்களில் அவர் நடிக்கும் நான்காவது படம் இது. இதுவரை வந்த மூன்று படங்களிலும் விஜய்யின் தோற்றம் ஒரே மாதிரியாகதான் இருக்கும். முதல்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களையும் வித்தியாசமாக காட்டயிருக்கிறார்கள்.