விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன விஜய் சேதுபதி

Cauveri Manickam (Sasi)| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (10:01 IST)
விஜய், அஜித் ஷூட்டிங் நடைபெற்ற பல்கேரியாவில், விஜய் சேதுபதியின் ஷூட்டிங்கும் நடைபெறுகிறது.

 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – கோகுல் இணைந்திருக்கும் படம் ‘ஜுங்கா’. இந்தப் படத்தில், ஹீரோயினாக ‘வனமகன்’ சயிஷா நடிக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் டானாக விஜய் சேதுபதி  நடிக்க, பாரிஸில் பிறந்து வளர்ந்த பெண்ணாக சயிஷா நடிக்கிறார்.
 
இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங், பாரிஸில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, பாடல் காட்சிகளை ஷூட் செய்வதற்காக பல்கேரியா மற்றும் ஆஸ்திரியாவுக்குச் செல்கிறது படக்குழு. அங்கு, 3 பாடல்கள் ஷூட் செய்யப்படுகின்றன. ராஜு சுந்தரம் கொரியோகிராப் செய்கிறார்.
 
அதை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 4ஆம் தேதிக்கு மேல் சென்னை திரும்புகிறது படக்குழு. பல்கேரியாவில்தான் அஜித்தின் ‘விவேகம்’. விஜய்யின் ‘மெர்சல்’ ஆகிய படங்கள் படமாக்கப்பட்டன.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :