வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2017 (16:16 IST)

விவசாயிகளை வேறு வழியில் போராட வலியுறுத்திய விஜய் சேதுபதி

விவசாயிகள் வேறு போராட்ட வழிமுறைகளை சிந்திக்க வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.


 

 
க.ராஜீவ் காந்தி இயக்கியுள்ள ‘கொலை விளையும் நிலம்’ ஆவணபடத்தின் அறிமுக விழா சென்னையில் நடைப்பெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசயிகள் மரணங்களையும், விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக கூறும் ஆவணப்படம் இது. 
 
50 நிமிடங்கள் ஓடிய இந்த படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது. இந்த ஆவணபடத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த விழாவில் கலந்துக்கொண்ட நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:-
 
என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீட்டுக்கே நேரடியாக அழைத்துச் சென்றது. நாம் போராடுவதும் போராடும் முறைகளும் எட்ட வேண்டிய காதுகளுக்கு பழகிவிட்டது என்று நினைக்கிறேன். போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். 
 
போரட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றார்.