விஜய் சேதுபதி படத்தின் இசை உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

Sasikala| Last Modified வெள்ளி, 14 ஜூலை 2017 (11:21 IST)
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கருப்பன்’ படத்தின் இசை உரிமையை, பிரபல நிறுவனமான சோனி வாங்கியுள்ளது.

 
 
‘ரேணிகுண்டா’ பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ‘கறுப்பன்’. ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில், கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, காவேரி, சரத் லோகிதாஸ்வா எனப் பலர் நடித்துள்ளனர்.
 
‘ரம்மி’ மற்றும் ‘றெக்க’ படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைத்துள்ளார்  டி.இமான். இந்தப் படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தத் தகவலை, இசையமைப்பாளர் டி.இமான் தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கிராமத்து ஆக்‌ஷன் கதையான இந்தப் படம், இந்த வருட இறுதிக்குள்  ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :