1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (10:56 IST)

விஜய் சேதுபதி, தனுஷ் படங்கள் இணையத்தில் வெளிவந்தது

விஜய் சேதுபதி, தனுஷ் படங்கள் இணையத்தில் வெளிவந்தது

திரையுலகம் இப்போது புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடும் இணையதளங்கள் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே திருட்டு வி.சி.டிக்களை கட்டுப்படுத்த திரையுலக சங்கத்தினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.


 


ரகசிய குறியீடு மூலம் புதிய படங்களை பதிவு செய்யும் திரையரங்குகள் கண்காணிக்கப்பட்டன. திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்தவர்களை போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்கள்.
 
இதனை தொடர்ந்து திருட்டு வி.சி.டிக்கள் நடமாட்டம் குறைந்துள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில், இணையதளங்களில் புதிய படங்களை வெளியிடும் இன்னொரு நூதன திருட்டுகள் பட உலகினருக்கு பெரிய தலைவலியாக வந்து நிற்கிறது. 
 
தற்போது தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து திரைக்கு வந்துள்ள ஆண்டவன் கட்டளை, தொடரி, ஆகிய படங்களும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளி வந்துள்ளன. அவற்றை பதிவிறக்கம் செய்து பலரும் பார்த்து வருகிறார்கள். தொடரி கடந்த வியாழக்கிழமையும் ஆண்டவன் கட்டளை வெள்ளிக்கிழமையும் திரைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

டுவிட்டரில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், இதனை தடுப்பதற்கு களத்தில் இறங்கும்படி தனுசுக்கு அவர் அழைப்பும் விடுத்துள்ளார். இதுபோன்ற குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் விஷால் முன்னிலையில் இருப்பதாக நடிகை குஷ்பு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
 
இதுகுறித்து புதியபடங்கள் உடனுக்குடன் தொடர்ந்து இணையதளங்களில் வெளிவருவதால் அடுத்தடுத்து படங்களை திரைக்கு கொண்டு வர உள்ள தயாரிப்பாளர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.