Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

“என்ன பெரிய இமேஜ்?” – விஜய் சேதுபதி நெத்தியடி


cauveri manickam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (12:05 IST)
இமேஜ் என்ன பெரிய இமேஜ்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் விஜய் சேதுபதி.

 


விஜய் சேதுபதி ஜோடியாக த்ரிஷா நடிக்கும் படம் ‘96’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. ட்ராவல் போட்டோகிராபராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தின் கதை, 1996ஆம் ஆண்டு காலகட்டத்தில் நிகழ்வது போல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. “த்ரிஷாவுடன் நடிப்பேன் என்று நினைத்து கூடப் பார்த்தது கிடையாது. த்ரிஷா, நயன்தாரா, தமன்னா போன்றவர்கள் இந்த நிலையில் இருப்பதற்கு காரணம், அவர்களின் கடின உழைப்புதான். ஆனால், நான் எல்லா படத்துக்கும் ஒரே மாதிரியாகத்தான் உழைக்கிறேன். வித்தியாசமாக எதையும் செய்வது கிடையாது. ரசிகர்கள் எதை விரும்புகிறார்களோ, அதைத்தான் நான் செய்கிறேன். எப்போதும் எளிமையைத்தான் விரும்புவேன். மேக்கப் போட்டுக்கொள்ளக் கூட விருப்பம் கிடையாது. இமேஜ் என்ன பெரிய இமேஜ்? நான், நானாகவே இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.


இதில் மேலும் படிக்கவும் :