வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (23:01 IST)

மெர்சல் விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை

இளையதளபதி விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவிலும் ஒரு குட்டிக்தையை சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 'புலி', 'தெறி', 'பைரவா' ஆடியோ விழாக்களிலும் ஒரு குட்டிக்கதையை கூறினார் என்பது அனைவரும் அறிந்ததே



 
 
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மெர்சல் ஆடியோ விழாவிலும் ஒரு குட்டிக்கதையை கூறினார். ஒரு இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் கார் மெக்கானிக் ஷாப்புக்கு தனது காரை ரிப்பேருக்காக எடுத்து சென்றார். காரை ரிப்பேர் செய்து முடித்துவிட்ட பின்னர் மெக்கானிக், இதய மருத்துவரிடம் ஒரு கேள்வியை கேட்டார்.
 
நானும் காரில் உள்ள எல்லா பாகங்களயும் ரிப்பேர் செய்கிறேன், வால்வுகளில் உள்ள அடைப்பை நீக்குகிறேன், எல்லா ஸ்பேர் பார்ட்ஸையும் கழட்டி சரியாக மாட்டுகிறேன். ஆனால் இதே வேலையை செய்யும் உங்களுக்கு மட்டும் பணம், புகழ் எல்லாம் அதிகம் கிடைக்கிறதே ஏன்? என்று கேட்டாராம்
 
அதற்கு டாக்டர் அளித்த ஒரு எளிமையான அதே நேரத்தில் அர்த்தம் பொதிந்த பதில் என்னவெனில், இதையெல்லாம் நீ கார் ஓடிக்கொண்டிருக்கும்போது செய்து பார், அப்போது உனக்கு இந்த கஷ்டம் புரியும்' என்றாராம்.ஒரு மிகப்பெரிய தத்துவத்தை ஒரு டாக்டர் மிக எளிமையாக கூறியதை தான் வியந்ததாக விஜய் 'மெர்சல்' மேடையில் கூறினார்.