வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2017 (11:14 IST)

விஜய்யின் வில்லன் இப்போ விஜய் சேதுபதிக்கும் வில்லனா?

‘தெறி’ படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன், விஜய் சேதுபதியின் புதிய படத்தில் நடிக்கிறார்.

 
 
அட்லீ இயக்கத்தில் வெளியான ‘தெறி’ படத்தில், அரசியல்வாதியாக வந்து தெறிக்க விட்டிருப்பார் இயக்குநர் மகேந்திரன்.  இதுவரை பல நடிகர் – நடிகைகளை இயக்கியவர் என்பதால், அவருடைய வில்லன் நடிப்பு பக்காவாக இருந்தது. தொடர்ந்து பல  படங்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்தது. 
 
அதன்படி, பாலாஜி தரணீதரன் இயக்கும் ‘சீதக்காதி’ படத்தில், முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் மகேந்திரன். நாயகனாக விஜய்  சேதுபதி நடிக்க, நயன்தாரா, ரம்யா நம்பீசன், ஓவியா, காயத்ரி உள்ளிட்ட சில நடிகைகள் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கின்றனர். 
 
‘தெறி’ படத்தில் வில்லன் நடிப்பு பெரிதாக பேசப்பட்டதால், அப்படியே தொடரலாம் என்று நினைக்கிறாராம் மகேந்திரன். எனவே, இந்தப் படத்திலும் அவர் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கலாம் என்கிறார்கள்.