விஜய்யின் ’’குட்டி ஸ்டோரி’’ உலக அளவில் ரீச்…டிரெண்டிங் செய்யும் ரசிகர்கள்

Sinoj| Last Modified புதன், 14 அக்டோபர் 2020 (17:00 IST)

நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அவர் இசையமைத்துள்ள குட்டி ஸ்டோரி, வாத்தி ஈஸ் கம்மிங்,
மற்றும் யுவன் ஷங்கர் ராஜா பாடிய ஒரு பாடல் என அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.,

குறிப்பாக குட்டி ஸ்டொரி பாடல் யூடியூபில் 7.4 கோடி பார்வைகளைப் பெற்று சுமார் 18 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இதை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :