செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (18:31 IST)

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளியான மெர்சல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அவரது பிறந்தநாள் பரிசாக வெளியாகியுள்ளது.


 

 
தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 61வது படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் 3 வேடங்களில் நடிக்கிறார். காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
 
வெகு நாட்களாக படத்தை பெயரை வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது அட்லி விஜய் பிறந்தநாள் பரிசாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் பெயர் மெர்சல் என வைத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.